Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

தடுப்பூசி போட்டு கொண்ட சவுதி பட்டத்து இளவரசர்

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மொகமது பின் சல்மான், கரோனா தடுப்பூசியை நேற்று போட்டுக் கொண்டார்.

உலகளில் கரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதைத் தடுக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை சில நாடுகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உட்பட சில நாடுகளின் தலைவர்களும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அந்த வரிசையில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மொகமது பின் சல்மான், நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்தன. பைசர் நிறுவனமும் பயோடெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசிகளை சமீபத்தில்தான் சவுதிஅரசு கொள்முதல் செய்தது.அதன்பின், நாட்டு மக்களுக்குதடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சவுதியில் கரோனா வைரஸால் 3 லட்சத்து 61 ஆயிரத்து 903 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 லட்சத்து 52 ஆயிரத்து815 பேர் குணமாகிவிட்டனர். மொத்தம் 6,168 பேர் உயிரிழந் துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பட்டத்து இளவரசர் சல்மான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இன்று நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க ஓய்வில்லாமல் கடினமாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட் டுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x