Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

வாஜ்பாயின் 96-வது பிறந்த நாள் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்தவர். கடந்த 1996, 1998-99 மற்றும் 1999 - 2004 என 3 முறை பிரதமர் பதவி வகித்தார் வாஜ்பாய். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காலமானார்.

வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி அவரை கவுரவிக்கும் வகையில், பாஜக சார்பில் ‘சிறந்த நிர்வாக தினம்’ கொண்டாடப்படுகிறது. அவருடைய 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சியை மிக உயரத்துக்குக் கொண்டு சென்றவர் வாஜ்பாய். அவருடைய சிறந்த பணிகள் என்றும் நினைவுகூரப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகள் உலகமெங்கிலும் உள்ள மக்களுக்கு பலம் தருகின்றன. நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைப்பதில் அவரது பாதை நமக்கு வழி காட்டட்டும். எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x