Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மக்களிடம் நிதி திரட்டுவது2024 தேர்தலுக்கான பிரச்சாரம் பாஜக மீது சிவசேனா சரமாரி புகார்

மும்பை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, ‘‘ராமர் கோயில் கட்டுவதற்கு பொதுமக்களை நாடு முழுவதும் சந்தித்து நன்கொடை வசூலிக்கப்படும்’’ என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதன்

படி நாடு முழுவதும் 4 லட்சம் தன்னார்வலர்கள் நன்கொடை வசூல் செய்ய உள்ளதாக மராத்தி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் டிருந்தது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று வெளிவந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுமக்களை சந்தித்து நன்கொடை வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பும், 2024-ம்ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரமும் ஒன்றுடன் ஒன்றுதொடர்புடையதாகத் தெரிகிறது.

பொதுமக்களின் நன்கொடையில் ராமர் கோயில் கட்டப்படும் என்று எதுவும் முடிவெக் கப்படவில்லை. ஆனால், ராமர் பெயரில் அரசியல் ஆதாயத்துக்காக பிரச்சாரம் செய்வது போல் நன்கொடை வசூல் நடவடிக்கைகள் உள்ளன. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களிடம் நன்கொடை வசூல் என்பது சாதாரணமானது அல்ல. இது அரசியல் ரீதியானது.

நன்கொடை வசூலில் ஈடுபட போகிறவர்கள் யார்? அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அப்படி இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட கட்சியை (பாஜக) சேர்ந்தவர்கள், நன்கொடை வசூல் என்ற பெயரில் பொதுமக்களை சந்திப்பது, உயிர்தியாகம் செய்தவர்களை அவ மானப்படுத்துவதாக அமையும்.

ராமர் கோயில் கட்ட வேண்டும்என்ற போராட்டம் அரசியல் ரீதியானது அல்ல. அது இந்துக்களின் உணர்ச்சி வெளிப்பாடு. இவ்வாறு சாம்னாவில் சிவசேனா கூறி யுள்ளது.

சிவசேனாவின் புகாரை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜக தரப்பில் கூறும்போது, ‘‘பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் விவகாரம், பாஜக.வுக்கு அரசியல் பிரச்சினையல்ல. ராமர் கோயில் பூமி பூஜை நடத்துவதற்கு சிவசேனா முட்டுக்கட்டை போட்டது. இப்போது நன்கொடை வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மக்கள் தாமாக முன்வந்து கோயில்கட்ட நன்கொடை அளிக்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x