Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

பிரிட்டனில் அதிவேகமாக பரவும் புதிய கரோனா வைரஸால் அச்சம் அனைத்து போக்குவரத்தையும் ரத்து செய்த உலக நாடுகள்

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வைரஸ் பர வலை தடுக்க பிரிட்டன் உடனான தரை, கடல், வான் வழி போக்குவரத்தை உலக நாடுகள் ரத்து செய்துள்ளன.

கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹா னில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வைரஸ் பரவியது. கடந்த ஜூன், ஆகஸ்டில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து, ஐரோப்பா முழுவதும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஆனால் கடந்த சில மாதங்களாக மீண்டும் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக பிரிட்டனில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளும் ஆய்வு நடத்தினர். அப்போது பிரிட்டனில் கரோனா வைரஸின் மரபணு மாற்றமாகி, புதிய வகை கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது அதிவேகமாகப் பரவினாலும், உயிரிழப்பு அதிகமாக இல்லை.

இந்த புதிய கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள் ளது. கரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவும் புதிய வகை வைரஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, புதிய வைரஸ் பரவுவதை தடுக்க பிரிட்டன் உடனான பேருந்து, ரயில், கப்பல், விமான போக்குவரத்தை ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்து வருகின்றன.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், போலந்து உள்ளிட்ட நாடுகள், பிரிட்டனுக்கான அனைத்து வகையான போக்குவரத்தையும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளன. பிரிட் டனில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொது மக்கள் அலைமோதுகின்றனர். அந்த நாட்டில் உணவு, மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் மனிதாபி மான அடிப்படையில் பிரிட்டனுக்கான சரக்கு போக்குவரத்துக்கு பிரான்ஸ் அனுமதி வழங் கியது. இதனிடையே அசாதாரண சூழலை சமாளிப்பது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கேபினட் அமைச்சர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

புதிய வைரஸ் குறித்து ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறும்போது, "ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. இந்த வைரஸ் அடிக்கடி மரபணு மாற்றம் அடைகிறது. தற்போது பரவும் புதிய வகை கரோனா வைரஸ் ஐரோப்பா முழுவதும் கோர தாண்டவமாடக் கூடும்.

வரும் ஏப்ரல் மாதம் வரை அனைத்து ஐரோப்பிய நாடுகளும் மிகுந்த எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். வைரஸ் பரவல் குறைகிறது என்று அலட்சியமாக இருக்க கூடாது" என்று எச்சரித்துள்ளனர்.

பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர தடை

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியாவும் போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. இந்த தடை டிசம்பர் 23 முதல் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். டிசம்பர் 22-ம் தேதிக்கு முன்பாக பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x