Published : 22 Dec 2020 03:15 am

Updated : 22 Dec 2020 03:15 am

 

Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மரணம் பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்

புதுடெல்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா (93) சிறுநீரகத் தொற்று காரணமாக சிலநாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்றும் ஏற்பட்டதைத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மோதிலால் வோரா நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் சத்தீஸ்கரில் இன்று நடைபெறும் என்று வோராவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மோதிலால் வோரா, மத்திய பிரதேச முதல்வராக பணியாற்றியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி உட்பட காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

மோதிலால் வோராவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மோதிலால் வோரா, தனது பல ஆண்டு கால அரசியல் பயணத்தில் சிறந்த நிர்வாகியாகவும் அமைப்பு ரீதியான பரந்த அனுபவம் கொண்டவராகவும் விளங்கினார். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ‘‘மோதிலால் வோரா உண்மையான காங்கிரஸ்காரர். மிகச்சிறந்த மனிதாபிமானியாக திகழ்ந்தவரை நாம் இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கல்’’ என்று கூறியுள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x