Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்க மக்கள் நீதி மய்யம் முறையீடு டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்போட்டியிட டார்ச் லைட் சின் னத்தை ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் மக்கள்நீதி மய்யம் கட்சி முறையிட் டுள்ளது.

கடந்த 2018-ல் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, 2019மக்களவை தேர்தலில் டார்ச் லைட்சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், அந்த சின்னத்தை முன்னிறுத்தி அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. அதில், மக்கள்நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தங்களுக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு, நேற்று டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறை யிட்டுள்ளார்.

இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியதாவது:

மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியாற்றி வந்தோம். டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கடந்த மாதம் கடிதம் மற்றும் மனு அளித்தோம். இந்தசூழலில், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட்சின்னம் இல்லை என்று அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரியில் எங்களுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கான நியாயமான காரணங்கள்தான், தமிழகத்திலும் உள்ளது. எனவே, தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கட்சியின் தலைமை அலுவலக பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு தலைமையிலான குழுவினர் முறையிட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் பதிலின்அடிப்படையில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் எங்களுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கான நியாயமான காரணங்கள் தான், தமிழகத்திலும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x