Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நண்பர்களிடம் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு உண்டு.மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். சொந்தபந்தங் களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள்.சிம்மம்: சகோதரரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.துலாம்: உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகர மாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.விருச்சிகம்: வெகுநாட்களாக மனதை உறுத்திய பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வீர்கள். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.கும்பம்: ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும்.மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். மனைவிவழி உறவினரால் நன்மை ஏற்படும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x