Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM

கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத் துறை செயலாளர் எச்சரிக்கை

சென்னை

கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை யில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் அதி நவீன கருவிகளுடன் கூடிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கருதி சிலர் குடும்ப நிகழ்ச்சி, உணவகம் உள்ளிட்ட இடங்களில் சரியாக முகக்கவசத்தை அணியாமல் இருந்து வருகின்றனர். இவ்வாறு, செயல்படுபவர்களுக்கு சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே, அனைவரும் முகக்கவசத்தை அணிய வேண்டும்.

கரோனா தடுப்பு வழிமுறை கள் அனைத்து கல்வி நிறு வனங்களுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த வழிமுறைகளை கடைபிடிக்காத கல்வி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சென்னையில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை இன்னும் 2 நாட்களில் 25 லட்சத்தை தொட உள்ளது. இந்த துரிதநடவடிக்கைகள் மூலம் தொற்று குறைந்ததோடு மட்டுமல்லாமல் இறப்பு விகிதம் 2.4 சதவீதத்தில் இருந்து 1.76 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னையில் 7 ஆயிரம் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட1 லட்சம் முன்கள பணியாளர்களை கணக்கெடுத்து பட்டியல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தடுப்பூசி வந்தவுடன் இந்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி வருவதற்கு 3 மாதங்கள் ஆகலாம் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். எனவே, அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். சென்னையில் இயங்கக் கூடிய அனைத்து அரசு மற்றும்தனியார் கல்லூரி விடுதிகளில்தங்கி படிக்கும் மாணவர்களுக்குகரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், கோயம்பேடு சந்தை, தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவற்றிலும் சூழற்சி முறையில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம். அதன் மூலம், தொற்று தீவிரமடைவதை தடுக்க முடியும்.

கரோனா மட்டுமல்லாது டெங்குஉள்ளிட்ட நோய்களும் பரவாமல்தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு 1,231 ஆக இருந்த டெங்கு பரவல்எண்ணிக்கை 2019-ம் ஆண்டு 349ஆக குறைந்தது. சென்னை மாநகராட்சி எடுத்த துரித நடவடிக்கைகளின் பலனாக தற்போது இந்த எண்ணிக்கை 14 ஆக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x