Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM

தமிழகத்தில் கரோனாவுக்குசிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை10 ஆயிரத்துக்குள் குறைந்தது

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குள் குறைந்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 720, பெண்கள் 412 என மொத்தம் 1,132 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 359, கோவையில் 117 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 1,161 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 2 லட்சத்து 13,509 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 79,291 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 375 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,210 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 3,122 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 9,951 பேர்சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இளைஞர் உட்பட 4 பேர், தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் என நேற்று 10 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,919 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,929 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் 232 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 30 லட்சத்து 86,807 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 66,213 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x