Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 630 அம்மா மினி கிளினிக் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 630 அம்மா மினி கிளினிக்குகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத் தார். சென்னையில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கிளினிக்குகளை முதல்வர் சென்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சாதாரண காய்ச்சல் போன்ற நோய் களுக்கு உடனடியாக சிகிச்சை பெறும் வகையில் ஒரு மருத்துவர், ஒரு செவி லியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’குகள் தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் படி, முதல்கட்டமாக தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் 630 மினி கிளினிக் குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை மாநகராட்சியில் ராயபுரம் சேக் மேஸ்திரி தெரு, வியா சர்பாடி எம்பிஎம் தெரு, மயிலாப்பூர் கச்சேரி சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை முதல்வர் பழனிசாமி நேற்று சென்று திறந்து வைத்தார்.

அப்போது முதல்வர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் கிராமப்புற மக்களுக்காக அதிமுக ஆட்சியில் 254 புதிய சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 30 படுக்கைகள், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் 166 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அம்மா குழந்தைகள் நல பெட்டகங்கள் 16 லட்சத்து 17 ஆயிரம் குழந்தைகளுக்கு ரூ.219 கோடியில் வழங்கப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவமனை திட்டத்தில் 7 லட்சத்து 62 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, 6 கோடியே 30 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் ரூ.59 கோடி மதிப்பில் 4 புற்று நோய் சிகிச்சை மண்டலங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.

31,868 பேர் நியமனம்

இதுவரை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9,726 மருத் துவர்கள், 15,659 செவிலியர்கள் உட்பட 31,868 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2011 வரை தமிழகத்தில் மருத் துவ படிப்பில் 1,945 இடங்கள்தான் இருந்தன. மறைந்த முதல்வர் ஜெய லலிதா பொறுப்பேற்ற பிறகு 2016-ம் ஆண்டு வரை மருத்துவ இடங்களை 3 ஆயிரத்து 60 ஆக உயர்த்தினார். தற்போது 11 புதிய மருத்துவ கல் லூரிகள் உருவாக்கியதன் மூலம் 1,650 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, 5,300 பேர் மருத்துவ படிப்பில் சேரும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதால், 313 மாணவர்களுக்கு இடம் கிடைத் துள்ளது. இவர்களுக்காக ரூ.16 கோடி சுழல் நிதி ஏற்படுத்தி கட்டணத்தையும் அரசே செலுத்தி வருகிறது.

பிரதமர் பாராட்டு

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து, அந்த முயற்சி நல்ல பலனை கொடுத்து வரு கிறது. வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை பிரதமர் பாராட்டியுள்ளார். தற்போது புதிய முற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத பகுதிகளில் சாதாரண காய்ச்சல் போன்ற நோய் களுக்கு உடனடியாக அப்பகுதி யிலேயே சிகிச்சை பெறும் அளவுக்கு 2 ஆயிரம் ‘அம்மா மினி கிளினிக்’குகள் தொடங்கப்படுகின்றன. ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை அரசு தொடர்ந்து வழங்கும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, ‘‘கரோனா வுக்கு எதிராக உலக நாடுகள் போரா டும் வேளையில் தமிழகம் நோய்த் தாக்குதலில் இருந்து வேகமாக மீண்டு வந்திருப்பது சாதனையாகும். மருத்துவ சேவையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகை யில், மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படுகின் றன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை கழுவுதல் போன்ற வற்றை முறையாக கடைபிடித்தால் வைரஸ் பரவலை நம்மால் தடுக்க முடியும். பொதுமக்கள் இந்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், வி.சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மினி கிளினிக்குகள் காலை 8 முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் செயல்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x