Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சி: கமல்ஹாசன் கட்சியுடன் ஒவைசி கூட்டணி?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய் யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளை யும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக் கவும் வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – ஐஜத மற்றும் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிகளுக்கு எதிராக அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ-இத்தாதுல் முஸ்லீமின் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தனியாக போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒவைசியின் கட்சியை உற்று நோக்க ஆரம்பித்தன.

அதேபோல, ஹைதராபாத் மாந கராட்சி தேர்தலிலும் ஒவைசி தனது கட்சியின் செல்வாக்கை தக்க வைத் துக்கொண்டார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் 44 வார்டுகளை கைப்பற்றிய ஏஐஎம்ஐஎம் கட்சி, இம்முறையும் அதே 44 வார்டு களில் வெற்றி பெற்றது.

ஆட்சியை பிடிப்பதில் அதிமுகவும் திமுகவும் தீவிர முனைப்பில் உள்ளன. மேலும், நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் புதிய கட்சியை தொடங்குகிறார். நடிகர் கமல்ஹாசன் ஏற்கெனவே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இவர்கள் இருவரும் முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளனர். அதனால், இந்தத் தேர்தல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழக பேரவைத் தேர்தலிலும் தனது கட்சியை களமிறக்க ஒவைசி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தமிழக பிரதி நிதிகள், ஹைதராபாத்தில் ஒவைசி யுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையின்போது, தமிழகத் தில் குறைந்தது 25 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவெடுக் கப்பட்டதாக தெரிகிறது.

மேலும், கமலின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முஸ் லிம்கள் அதிகம் வசிக்கும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங் களில் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடலாம்.ேலும், தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளை ஒன்றி ணைத்து ஒரே அணியில் கொண்டு வரவும் ஓவைசி திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது.

கூட்டணிக்கு தயார்

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, ‘‘பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் பேசி வருகிறது. இருப்பினும், கூட்டணி குறித்து தற்போது வெளிப்படையாக எதுவும் கூற முடியாது. ஒவைசி கட்சி மட்டுமின்றி, மாற்றத்தை ஏற்படுத்தும் நல்ல நோக்கத்துடன் மக்கள் நீதி மய்யத்தை அணுகும் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அரசியல் மாற்றத்துக்கான முயற்சிக்கு ஒத் துழைக்க தயாராக இருக்கும் கட்சிகளுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளோம்’’ என்றார்.

‘சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன்’

மதுரை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கினார். மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கிய அவர், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

மதுரையில் தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் எழுச்சியாக இருந்தது. இது தொடர்பாக எனது மகிழ்ச்சியை தொண்டர்களிடம் ட்விட்டரில் பகிர்ந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் எங்களது நேர்மையை மக்களிடம் சொல்லி தேர்தலை சந்திப்போம்.

திரையுலகில் நானும், ரஜினியும் சாதனை புரிந்துள்ளோம். அரசியலிலும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது என ஓராண்டுக்கு முன்பே சொல்லி இருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் வரும். டிச.31-க்கு பிறகு பார்க்கலாம். மூன்றாவது அணி குறித்து தற்போது கூற முடியாது. அதுபற்றி விரைவில் அறிவிப்பேன். மதுரை மீது எனக்கு அதிக அக்கறை என்பதால் அதை இரண்டாவது தலைநகராக மாற்றுவேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன். எங்கே என்பது பற்றி இப்போது கூற முடியாது. நடிகர் என்பதையும் தாண்டி எனக்கு மக்கள் கூட்டம் வருகிறது. அப்படி வந்ததால்தான் எம்ஜிஆர் புரட்சித் தலைவரானார். நானும், அவரும் ஒரே இனம் (நடிகர்).

ஒரு நாடு, மாநிலம் வளர வேண்டும் என்றால் கார்ப்பரேட் கம்பெனிகளும் முக்கியம். இதை வரவேற்கிறோம். எம்ஜிஆரை நான் முன்னிலைப்படுத்தவில்லை. அவர் மட்டுமே எம்ஜிஆர். நான் கமல்ஹாசன். என்னை கார்ப்பரேட் இயக்குவதாக கூறுவது தவறு. நாங்கள் யாருக்கும் ‘பி’ டீம் அல்ல. காந்தியின் ‘பி’ டீம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x