Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

சுற்றுச்சூழல், வனத்துறையின் முன்அனுமதி பெற்று சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தை தொடர அனுமதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய தீர்ப்பு

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை யின் முன்அனுமதி பெற்று, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட உரிய வழிமுறைகளை சட்டத் துக்குட்பட்டு சேலம் – கிருஷ்ண கிரி – சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை தொடரலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

மத்திய அரசின் பாரத்மாலா திட் டத்தின்கீழ் சேலம் - கிருஷ்ணகிரி - சென்னை இடையே 277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழித்தடங்கள் கொண்ட பசுமை சாலை திட் டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. தேசிய நெடுஞ் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் படி சேலத்தில் இருந்து அரூர் வரை என்.எச்.179-ஏ என்றும், அரூரில் இருந்து தாம்பரம் வரை என்.எச்.179-பி என்றும் பெயரிடப்பட்டு சுமார் 1,900 ஹெக்டேர் அளவுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் தொடங்கியது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து சேலத்துக்கு 6 மணி நேரத்துக்கு பதிலாக 3 மணி நேரத்தில் அதி விரைவாக பயணிக்க முடியும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் இந்த திட்டத்தை செயல்படுத்து வதில் தமிழக அரசும் தீவிரம் காட்டி வந்தது.

இந்த திட்டத்துக்காக சுற்றுச் சூழல் துறையின் முன்அனுமதி யின்றி அறிவிப்பாணை வெளி யிடப்பட்டுள்ளதாகவும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நிலங் கள் கையகப்படுத்தப்படவில்லை என்றும் கூறி பி.வி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல விவசாயிகள் சார்பிலும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சேலம் - சென்னை இடை யிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தும், இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய் தும் கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப் பளித்தது. மேலும் இத்திட்டத்துக் காக விவசாயிகளிடம் மேற்கொள் ளப்பட்ட நில ஆர்ஜிதமும் செல் லாது என அறிவித்து அவற்றை 8 வாரங்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

மேல்முறையீடு

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத் தின் திட்ட இயக்குநர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்துள்ள 140 பக்க விரிவான தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் - கிருஷ்ணகிரி - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை சுற்றுச் சூழல் துறையின் முன்அனுமதி பெற்று, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட உரிய வழிமுறைகளை சட்டத்துக்குட்பட்டு கடைபிடித்து தொடரலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. பொதுவாக இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் நாட்டின் வளர்ச் சிக்கான திட்டங்கள் என்பதால், அது தொடர்பான அறிவிப்பாணைகள் மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவு என்ற அடிப்படை யிலேயே எடுக்கப்படுகிறது. அதில் நீதிமன்றம் தலையிட்டு இதுபோன்ற அறிவிப்பாணைகளை ரத்து செய்ய முடியாது. அதை எதிர்த்து வழக்கு தொடர்வது என்பதும் ஏற்புடையதல்ல.

சாலை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கென தனிப்பட்ட அதிகாரங்கள் உள்ளன. ஆனால், அதேநேரம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முன்அனு மதியையும் கண்டிப்பாக பெற வேண்டும். தற்சமயம் இதுதொடர் பாக நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மேலும், சென்னை உயர் நீதி மன்றம் தனது தீர்ப்பில், நிலம் கைய கப்படுத்தும் நடவடிக்கைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய முறையில் மேற்கொள்ளவில்லை. எனவே, அந்த நிலங்களை அரசு நிலங்களாக வகைமாற்றம் செய் தது தவறு. அந்த வகை மாற் றத்தை மறுபடியும் திருத்தி உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. அந்த உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம். இத்திட்டத்துக்கான அறிவிப்பா ணையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.பாலு கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்றம், இந்த திட்டத்துக்காக விவசாயி களின் நிலத்தை உரிய முறையில் கையகப்படுத்தவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. அதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி அந்த நிலத்தை வகைமாற்றம் செய்தது செல்லாது என அறிவித்து இருப்பது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இனி இந்த திட்டத்துக்காக நிலங் களை கையகப்படுத்தவோ அல்லது வகை மாற்றம் செய்யவோ உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி புதிதாக அறிவிப்பாணை வெளியிட வேண் டும். ஏற்கெனவே, போதிய அள வில் சாலைகள் இருக்கும்போது இயற்கையையும், விவசாயத்தை யும் அழித்து இந்த திட்டம் அவ சியம் கொண்டுவரப்பட வேண் டுமா என்பதுதான் எங்களின் கேள்வி. அதற்காகத்தான் சட்டப் போராட்டத்தை நடத்தினோம். ஆனால் இந்த திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் முழுமையாக உறுதி செய்யாதது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.

முன்னதாக, 8 வழிச்சாலை திட்டத் துக்கு உச்ச நீதிமன்றமும் தடை விதித்து இருப்பதாக காட்சி ஊடகங் களில் செய்தி வெளியானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஊடகங்களில் தவறுதலாக செய்தி வெளியிடப்பட்டதாக பின்னர் தெரிய வந்ததால் விவசாயிகள் சோகமடைந்து இந்த திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x