Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

ஆக்ரா மெட்ரோ ரயில் பணிகள் தொடக்க விழா உரிய காலத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் திறன்மிக்கது பாஜக அரசு பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் பாஜக அரசு சரியாகத் தொடங்கி அதை உரிய காலத்தில் முடிக்கும் திறன் கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிறை வேற்றப்படாத பல திட்டங் கள் உள்ளன. நாட்டின் மிகப் பெரும் பிரச்சினையாக இருந் ததே கட்டமைப்பு வசதிதான். இதற்காக பெரிய அளவி லான திட்டப் பணிகள் தொடங் கப்படும். ஆனால் அதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப் படாமல் அந்தத் திட்டங்கள் பல ஆண்டுகளாக செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கும்.

ஆனால் பாஜக அரசு புதிய திட்டப் பணிகளை தொடங்கும் போது அதற்குரிய நிதி ஆதாரத்தையும் உறுதி செய்த பிறகே செயல்படுத்த தொடங்கும். இதனால் பணிகள் திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும்.

ஆக்ரா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகராகும். இது பாரம்பரியமிக்க கலாச்சாரத் தோடு இணைந்த நகரம். இந்நகரம் தற்போது 21-ம் நூற்றாண்டுக்குள் நுழைந்துள்ளது. இந்நகரில் வசதிகளை அதிகரிக்க பல்வேறு ஸ்மார்ட் திட்டங்கள் ரூ.1,000 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மேற்கொள்ளப்படும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் இந்நகரின் வசதியை மேலும் அதிகரிக்க உதவும்.

கடந்த 2014-ம் ஆண்டு வரை நாட்டில் மெட்ரோ வழித்தட தூரம் 225 கி.மீ. ஆக இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 650 கி.மீ. தூரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை 1,000 கி.மீ. தூரமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. தற்போது 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்திருக் கும் சகோதரிகள், புதல்விகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் அனைவரும் சமீப கால மாகதான் தேர்தலின் பலனை பார்த்து வருகின்றனர். ஹைதரா பாத்தில் நடந்து முடிந்த பெரு நகர மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு அளித்த ஆதரவு மேலும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.

ரூ.8,380 கோடி செலவு

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8,379.62 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. 2 வழித்தடங்களில் மொத்தம் 29.4 கிலோ மீட்டர் தூரத்தை மெட்ரோ ரயில் பூர்த்தி செய்யும். இந்த மெட்ரோ ரயில் தடம் முக்கிய சுற்றுலா பகுதிகளான தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, சிகண்ட்ரா உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லும். இந்த வழித்தடங்களில் ரயில் மற்றும் பேருந்து இணைப்பும் அருகாமையில் இருக்கும். இந்தப் பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவேற் றப்படும்.

‘ நாட்டின் வளர்ச்சிக்கு சீர்திருத்தம் அவசியம்’

ஆக்ரா நிகழ்வில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:

கடந்த நூற்றாண்டுகளில் கொண்டு வரப்பட்ட சில சட்டதிட்டங்கள் இப்போதைய கால கட்டத்துக்குப் பொருந்தாத வகையில் உள்ளன. அவை தற்போது பெரும் சுமைகளாக மாறிவிட்டன. சீர்திருத்தம் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டவே இந்த அரசு விரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகளைதான் எடுத்து வருகிறது.

வளர்ச்சியை எட்டுவதற்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு எவ்வித சிரமமும் இன்றி வாழ்வதற்கான வழிவகைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவற்றில் அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை சுட்டிக்காட்டியே இக்கருத்தை பிரதமர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x