Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த புயல் குருசடை தீவில் பலத்த சேதம்

காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த புரெவி புயலால் ராமேசுவரம் அருகேயுள்ள குருசடைத் தீவில் பலத்த சேதம் ஏற்பட்டது.

பின்னர் பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடந்துஅரபிக் கடலுக்குச் செல்லும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,சற்று திசை மாறி வடமேற்கே பயணித்து 3-ம் தேதி பாம்பன் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக நிலை கொண்டது.

தொடர்ந்து நேற்று காலை மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ராமநாதபுரம் அருகே 40 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் 30 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருவதாகவும், பாம்பன் வழியாக தென்மேற்கு திசையில் நகர்ந்து கேரள பகுதியைநோக்கி நகரும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், 4-வது நாளாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் கடற்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழை மற்றும் சுழன்றடித்த சூறாவளியால் ராமேசுவரம் அருகே உள்ளகுருசடை தீவில் உள்ள கட்டிடங்கள், சுற்றுலாப் படகு மற்றும் மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்: (மி.மீ.-ல்) ராமேசுவரம்-111, மண்டபம்-78, தங்கச்சிமடம்-72, பாம்பன் -64, பரமக்குடி- 39, வாலி நோக்கம் - 26.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x