Published : 05 Dec 2020 03:15 AM
Last Updated : 05 Dec 2020 03:15 AM

கல்வெட்டியல், தொல்லியல் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பம் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் படிப்பில் சேர 10-ம்வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை தரணியில் உள்ளஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2021-2022-ம் ஆண்டுக்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை,இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப் படும்.

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டயப் படிப்பு சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடு முறை தினங்களில் ஓராண்டு காலம் நடைபெறும்.

இப்பயிற்சியில் சேர 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.2,500. இப்படிப்பில் சேர வயதுவரம்பு கிடையாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிச.28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வகுப்புகள் ஜனவரியில் தொடங்கும். மேலும்தகவலுக்கு 044-22542992, 9500012272 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இத் தகவலை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்கோ.விஜயராகவன் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x