Published : 05 Dec 2020 03:17 AM
Last Updated : 05 Dec 2020 03:17 AM

‘புரெவி' புயல் காரணமாக தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் தொடர் கனமழை குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

‘புரெவி' புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக மழை நீடித்தது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் காற்றும் வீசியதால், பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் இருந்த பழமையான மரங்கள் சாய்ந்தன.

மேலும், தொடர் மழை காரணமாக அம்மாபேட்டை அருகே புளிய குடி கிராமத்தில் வடக்குத் தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்கியதால், 300-க்கும் மேற்பட்ட வீடுகளிலும், பழைய பேராவூரணியில் பாசன வாய்ககாலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் தண் ணீர் புகுந்தது. பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் சித்தாதிக்காடு கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் சென்றதால், போக்கு வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதேபோல, ஒரத்தநாடு அருகே பருத்திக்கோட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் தண்ணீர் புகுந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டி, அப்பகுதி மக்கள் 50-க் கும் மேற்பட்டோர், தஞ்சாவூர்- பட்டுக் கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் அவர்களை சமா தானம் செய்தனர். இந்த மறியலால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவோணம் அருகே நெய்வேலியில் உள்ள 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியின் கரை 15 அடி அகலத்துக்கு உடைந்து, அக்னியாறு வழியாக தண்ணீர் வெளியேறியது. வெள்ளாம்பெரம்பூர் கோண கடுங்கலாற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆய்வு செய்தார். பின்னர், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட இடத்தை மணல் மூட்டைகள், கம்பு களைக் கொண்டு சீரமைத்தனர்.

மேலும், குழிமாத்தூர் பகுதி யில் ஆகாயத் தாமரையால் வாய்க் கால்களில் தேங்கிய தண்ணீர் வாய்க்காலை உடைத்துக் கொண்டு வயல்களுக்குள் பாய்ந்தது. இதையடுத்து, வாய்க்காலில் இடையூறாக இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன.

இதேபோல, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை சூழ்ந்த தண்ணீர், கோயிலுக்குள்ளும் புகுந்தது. கோயிலின் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் நந்திமண்டபம், ஏழிசை படிகள் அமைந்துள்ள பகுதி, அம்மன் கோயில் ஆகிய இடங்களில் 4 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. இதனால், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். இந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தொல்லியல் துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்(மி.மீட்டரில்):

ஈச்சன்விடுதி 202.40, அணைக்கரை 198, மஞ்சளாறு 192, பேராவூரணி 195, பட்டுக்கோட்டை 168, மதுக்கூர் 161, பாபநாசம் 138, திருவிடைமருதூர் 135.90, அய்யம் பேட்டை, கும்பகோணம் 134, பூதலூர் 109, வல்லம் 104, குருங்குளம் 98, தஞ்சாவூர் 97, திருக்காட்டுப்பள்ளி 94, நெய் வாசல் 92, அதிராம்பட்டினம் 80, வெட்டிக்காடு 69, திருவை யாறு, கல்லணை 62, ஒரத்தநாடு 37.

நாகை, மயிலாடுதுறையில்...

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர் கன மழை காரணமாக, பல்வேறு இடங்களில் பிரதான சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகை அக் கரைப்பேட்டையில் உள்ள கருவாடு உலர்த்தும் தளத்தில் தண்ணீர் குளம்போல தேங்கியிருந்தது. மேலும், நாகையில் புதிய மற்றும் பழைய நம்பியார் நகர், நாகூர் சம்பா தோட்டம், நாகூர் எம்ஜிஆர் நகர், நாகை வண்டிக்காரத் தெரு, ஹரி பண்டிதர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்துள்ளது.

நாகை நீலா வடம்போக்கி சாலை, பொது அலுவலக சாலை, நேதாஜி சாலை, முதலாவது கடற்கரை சாலை, நீலா தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 94 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல, கொள்ளிடத்தில் 46.20 மி.மீ, மயிலாடுதுறையில் 31.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில்...

காரைக்கால் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்ததால், மக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. இதனால் திருநள்ளாறு அரங்கநகர், சுரக்குடி, காரைக்கால் நகரப் பகுதியில் திருநகர், பெரிய பேட், ராஜாத்தி நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது.

திருநள்ளாறு நெய்வாச்சேரி, அரங்கநகர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சுரக்குடி தீயணப்பு நிலையம் எதிரில் இருந்த 3 மின் கம்பங்கள் சாய்ந்த தால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்தன. அவற்றை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெட்டி அகற்றினர்.

சில இடங்களில் விளைநி லங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டன. மீனவர்கள் தொடர்ந்து 13-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு நேற்று 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது.

காரைக்காலில் நேற்று காலை 8.30 மணி வரை 72.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோல,புதுச்சேரி அமைச் சர் ஆர்.கமலக்கண்ணன், எம்எல் ஏக்கள் கே.ஏ.யு.அசனா, கீதா ஆனந்தன் ஆகியோர், அவரவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளை பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x