Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

அப்துல் கலாம் விரும்பியபடி தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல்கலாம்உடனான தனது அனுபவம் குறித்து பிரம்மோஸ் விண்வெளிமைய நிறுவனர் ஏ.சிவதாணுப்பிள்ளை எழுதியுள்ள ‘அப்துல்கலாமுடன் 40 ஆண்டுகாலம்- சொல்லப்படாத தகவல்கள்’என்ற நூல் வெளியீட்டு விழா காணொலி மூலம் நேற்று நடை பெற்றது.

இதில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நூலை வெளியிட்டு அவர் பேசியதாவது:

ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவராக வாழ்ந்தவர் அப்துல் கலாம். எளிமை,நேர்மையின் அடையாளமாகவும், இளைஞர்களுக்கு பிரியமானவராகவும் திகழ்ந்தவர். மக்களுக்கான குடியரசுத் தலைவராகவே இருந்தார்.

ஏராளமான வளங்கள், திறன்கள் கொண்ட இந்தியா, வளர்ச்சிபெற்ற நாடாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இளைஞர்களிடம் உத்வேகம் ஏற்படுத்த தொடர்ந்து பணியாற்றினார்.

தற்போதைய கரோனா தொற்றால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க கிராமங்கள், சிறு நகரங்களில் வேலைவாய்ப்புகள், பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

உலக அளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகஇந்தியா உள்ளது. தேசத்தைகட்டமைக்கும் முயற்சிகளில் இந்த சக்தியைப் பயன்படுத்தவேண்டும். வளர்ச்சி என்பதற்காகஇயற்கைக்கு எதிராக செயல்பட்டுவிடக் கூடாது. குறைந்த எரிசக்தி தேவைக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை நமது ஆய்வாளர்கள் கண்டறிய வேண்டும். கலாம் கூறியபடி, அனைத்து துறைகளிலும் தற்சார்பு கொண்டநாடாக இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நூல் ஆசிரியர் ஏ.சிவதாணுப் பிள்ளை,பேராசிரியர் ஒய்.எஸ்.ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x