Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

டி 20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20தொடரை முழுமையாக 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

கேப்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில்பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்கள் இழப்புக்கு191 ரன்கள் குவித்தது. 192ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் இங்கிலாந்து டி20 தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தி யாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி கண்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x