Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM

கடலூர் மாவட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு

கடலூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் நடத்தப்படும் சுப நிகழ்ச்சிகளின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேற்று சில ஆலோசனைகளை வழங்கி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, திருமண மண்டப உரிமையாளர்கள், திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தும்முன்பும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பும் திருமண மண்டபங்களை சுத்தப்படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல், பிளிச்சிங் பவுடர் போடுதல் மற்றும் கழிவு களை அகற்றுதல் போன்றமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக நடைமுறைப் படுத்துதல் வேண்டும்.

திருமண மண்டபங்களில் பணிபுரிபவர்கள், சமையலர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வாடிக்கை யாளர்கள் முன்பதிவு செய்யும் பொழுதே, தமிழ்நாடு அரசால் அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி, சுப நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ளும் நபர்கள் 100 என்ற எண்ணிக்கைக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என அறிவுறுத்துதல் வேண்டும்.

திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும் பொழுதே, தமிழ்நாடு அரசால் அறிவித்துள்ள நெறிமுறை களின்படி, சுபநிகழ்ச்சிகளுக்கு கலந்துகொள்ளும் நபர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமி நாசினி உபயோகித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் அவ்வப்போது சோப்பு நீரால் கைகளை கழுவுதல் போன்றவைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x