Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக 10 ஆண்டில் ரூ.18.5 லட்சம் கோடிஇந்தியாவில் ஜிடிபி இழப்பு மெக்கன்சி ஆய்வறிக்கையில் தகவல்

காலநிலை மாற்ற பாதிப்புகளில் அதிக வெப்பம் என்பது மிகமுக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மெக்கன்சி நிறுவனம் வெப்பம் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒன்றை தயார்செய்துள்ளது. அதில் அதிகவெப்பம் காரணமாக பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதன்மையாக இருக்கிறது என்று கூறியுள்ளது.

இந்தியாவின் மொத்த ஜிடிபி.யில் 50% வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடிய வேலை வாய்ப்புகளாக இருக்கின்றன. குறிப்பாக விவசாயம், சுரங்கத் துறை மற்றும் கட்டுமான துறை ஆகியவை. வெப்பம் அதிகரிக்கும் போது இந்தத் துறைகள் சார்ந்த பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும். இதனால் ஜிடிபி.யில் இந்தத் துறைகளின் பங்கு வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. பத்தாண்டுகளில் சுமார் ரூ.18.5 லட்சம் கோடி அளவில் இந்திய ஜிடிபியில் இழப்பு ஏற்படலாம் எனக் கூறியுள்ளது.

ஆசிய கண்டத்தில் அதிகவெப்பம் காரணமாக பாதிக்கப்படும் இடங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் 16 கோடி முதல் 20 கோடி வரை இருக்கலாம் என கூறியுள்ளது.

வெப்பம் அதிகரிக்கும் போது உயிர் இழப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரித்துள்ளது. காலநிலை மாற்ற பாதிப்புகளை குறைக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், ஆரோக்கியமான இளம் வயதுள்ள நபர்களைக் கூட அதிக வெப்பம் தாக்கி உயிரிழக்க வைக்க கூடும் என்று மெக்கன்சி வெளியிட்ட ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x