Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

ஆப்கனில் தீவிரவாதிகள்தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் 34 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தான், கஜ்னி மாகாணத்தில் வெடிபொருள் நிரம்பிய ஜீப் ஒன்றை ராணுவ காமாண்டோ முகாம் ஒன்றின் மீது தற்கொலைப் படைதீவிரவாதி ஒருவர் மோதி வெடிக்க செய்தார். இதில் 31 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர்.

தெற்கு ஆப்கானிஸ்தான் ஜபுல் மாகாணத்தில் மாகாண கவுன்சில் தலைவர் அட்டாயன் ஹக்பாயத்தின் வாகன அணி வரிசை மீது தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் வெடிபொருள் நிரப்பிய காரை நேற்று மோதி வெடிக்கச் செய்தார். இதில் அட்டாயன் ஹக்பாயத் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். எனினும் அவரது பாதுகாவலர் உட்பட 3 பேர் உயரிழந்தனர். இவ்விரு தாக்குதல்களுக்கும் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக நடக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலிபான்களுடன் அரசுப் பிரதிநிதிகள் கத்தாரில்நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து 2,500 வீரர்களை வரும் ஜனவரியில் திரும்பப் பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை விரைவாக குறைத்தால் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

தலிபான்களை ஒடுக்க அமெரிக்க வீரர்கள் பல ஆண்டுகளாக முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஏராளமான கோடி டாலர்கள் செலவிடப்படுகிறது. இதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. அந்தப் பணத்தை அமெரிக்க மக்கள் நல்வாழ்வுக்குப் பயன்படுத்தலாம் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x