Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.1,392 குறைவு

கடந்த ஒரு வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.1,392 குறைந்துள்ளதால், நகைக் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தையும் தாண்டியதால், பொதுமக்கள் நகைகள் வாங்க தயக்கம் காட்டினர். இதற்கிடையே, கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தொழில்கள் மீண்டும் வழக்கம்போல் இயங்க தொடங்கின. இதனால், தங்கத்தில் முதலீடு குறைந்து, தங்கம் விலையும் சற்று குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.1,392 குறைந்துள்ளதால், நகைக் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x