Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

வரும் 2021-ம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை தினங்கள் தலைமைப் பதிவாளர் அறிவிப்பு

சென்னை

அடுத்த ஆண்டுக்கான உயர் நீதிமன்ற மற்றும் கீழமை நீதிமன்றங்களின் விடுமுறை தினங்கள் குறித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வரும் 2021 ஜன.1-ம்தேதியும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12-ம் தேதி முதல் ஜன.15-ம் தேதி வரை 4 நாட்களும், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன.26-ம் தேதியும் விடுமுறை விடப்படுகிறது.

புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்.2-ம் தேதி, தெலுங்கு புத்தாண்டுமற்றும் தமிழ் புத்தாண்டு தினங்களை முன்னிட்டு ஏப்.12 முதல்ஏப்.14-ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. மே 1-ம் தேதி முதல்மே 31 வரை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறையாகும்.

ரம்ஜானுக்காக மே 14-ம் தேதியும், பக்ரீத் பண்டிகைக்காக ஜூலை 21-ம் தேதியும், மொஹரத்தை முன்னிட்டு ஆக.20ம் தேதியும், கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு ஆக.30-ம்தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்காக செப்.10-ம் தேதியும், ஆயுதபூஜை (அக்.14) மற்றும் விஜயதசமி (அக்.15) மற்றும் தசரா பண்டிகைக்காக அக்.9 முதல் அக்.18 வரையிலும், மிலாது நபியை முன்னிட்டு அக்.19-ம் தேதியும் விடுமுறை விடப்படும்.

இதேபோல தீபாவளியை முன்னிட்டு நவ. 3 முதல் நவ.5-ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. இதுதவிர உழவர் திருநாள் (ஜன.16), மகாவீர் ஜெயந்தி (ஏப்.25), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2), கிறிஸ்துமஸ் (டிச.25) ஆகியவை சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் ஏற்கெனவே விடுமுறை தினங்கள் என்பதால் தனியாக குறிப்பிடப்படவில்லை. டிச.24 முதல் டிச.31 வரை கிறிஸ்துமஸ் விடுமுறையாகும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கும் இந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. அதேநேரம் ஜன.23, மார்ச் 6, ஏப்.17, ஜூன் 5, ஜூலை 3, ஆக.7, செப்.4, அக்.23, நவ.20, டிச.4 ஆகிய 10 சனிக்கிழமை தினங்களில் கீழமை நீதிமன்றங்கள் செயல்படும். இதைத் தவிர்த்து அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் குடும்பநல நீதிமன்றங்கள் உட்பட அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் விடுமுறை தினங்களாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x