Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 07:20 AM
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை சிட்னியில் நடைபெறுகிறது.
இந்திய அணி கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நியூஸிலாந்து மண்ணில் விளையாடியது. அந்த அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை 0-3 என இந்திய அணி இழந்திருந்தது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்து மண்ணில் ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றியிருந்தது. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதாக கருதப்பட்டாலும் உள்நாட்டில் போட்டி நடைபெறுவது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியை பொறுத்த வரை வீரர்கள் சிறந்த பார்மில் இருப்பது நேர்மறையான விஷயம். அனைத்து வீரர்களும் சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி சிறந்த திறனை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் இருதரப்பு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அணிகள் விவரம்
ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷான், அலெக்ஸ் காரே, மேத்யூ வேட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், கேமரூன் கிரீன், ஹெண்ட்ரிக்ஸ், ஆடம் ஸம்பா, அஷ்டன் அகர், டேனியல் சாம்ஸ், ஆண்ட்ரூ டை, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், சீன் அபோட், ஜோஸ் ஹசல்வுட்.
இன்றைய ஆட்டம்
நேரம்: காலை 9.10
நேரலை: சோனி லைவ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT