Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் நிவர் புயலால் கன மழை தொடரும் என்பதால் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று பொது விடு முறை அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், அரசு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுத்துள்ளதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை நிவர் புயல் நெருங்கி வரும் நிலையில், நேற்று காலை நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது. நீர் திறப்பை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:

நிவர் புயல் மணிக்கு 11 கிமீ வேகத் தில் நகர்ந்து, நள்ளிரவு 1 மணியளவில் புதுச்சேரி அருகில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக அரசால் அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு, தாழ் வான பகுதிகளில் வசிக்கும் மக் களை முகாம்களில் தங்க வைத்து வருகிறோம். சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள முகாம்களில் இதுவரை 400 பேர் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் உயர மான 24 அடியில், தற்போது 21.5 அடி உயரம் நீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு 4000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டி ருக்கின்றது. அணையில் இருந்து ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏரிக்கு வரும் நீரை படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

அதோடு, ஆதனூர் ஏரியி லிருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் அடையாற்றின் வழியாக வெளியேறி வருகிறது. செம் பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்னும் இரண்டு, மூன்று மணி நேரத்திற்குள் வரும் நீர் முழுவதும் திறக்கப்படும்.

அடையாறு ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது. 60 ஆயிரம் கன அடி நீர் செல்லும் அளவுக்கு அகலம் உள்ளது. எனவே, பொது மக்கள் அச்சப்பட வேண்டாம். சென் னையில் நேற்றில் இருந்து கன மழை பொழிவதால், 30 தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கின்றது. அந்த தண்ணீரை ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி, மாநகராட்சி வெளியேற்றி வருகிறது.

புயலால் திருவாரூர், நாகை, தஞ்சா வூர், பெரம்பலூர், அரிய லூர், திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கட லூர், விழுப்புரம், சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் என 16 மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது, தொடர்ந்து கன மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு, முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தேவை யான அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. அமைச்சர்களும் அப் பகுதிகளில் முகாமிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். புயலால் மக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொது விடுமுறை

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

இன்று (நவ.25) அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், தொடர்ச்சி யாக மழை பெய்து வருகிறதே?

திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப் புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 16 மாவட் டங்களுக்கும் நாளை (நவ.26-ம் தேதி) விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்படுபவர்களுக்கு நிவா ரணத் தொகை ஏதும் வழங்கப்படுமா?

ஏற்கனவே வழங்கப்படும் நிவார ணம் அடிப்படையில் பாதிக்கப்படு பவர்களுக்கு வழங்கப்படும்.

இதுபோன்ற காலங்களில் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத சூழல் நிலவுகிறதே?

அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று ஏற்கெனவே வேளாண் துறை செயலாளர் அறிவுறுத்தி யுள்ளார். பெரும்பாலான விவசாயிகள் அத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

உபரி நீர் திறப்பு

‘நிவர்’ புயல் காரணமாக, பெய்த கனமழையால் நேற்று காலை நில வரப்படி செம்பரம்பாக்கம் நீர்மட்டம் 21.55 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், பிற்பகல் 11.45 மணிக்கு நீர்மட்டம், 22 அடியை தொட்டது. இதையடுத்து 19 கண் மதகு களில் 7 ஷட்டர்கள் வழியாக, உபரி நீர் திறக்கப்பட்டது. தற்போது, விநாடிக்கு 7,000 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிச்சாமி கொட்டும் மழையில் குடை பிடித்தபடி செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x