Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

போராட்டம் நடத்த டெல்லி செல்லவிடாமல் தடுத்ததால் பாதி மொட்டையுடன் விவசாயிகள் மறியல்

டெல்லிக்கு புறப்பட்டுச் சென்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட் டிருந்த தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரை போலீஸார் நேற்று தடுத்து நிறுத்தியதால் பாதி மொட்டை அடித்துக்கொண்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருட்களுக்கு லாபகர மான விலை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.அய்யாக் கண்ணு ஏற்கெனவே அறிவித்திருந் தார்.

அதன்படி, டெல்லிக்கு செல்வ தற்காக திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள அய்யாக் கண்ணுவின் வீட்டில் விவசாயிகள் நேற்று திரண்டனர். ஆனால், போலீஸார் அய்யாக்கண்ணுவை அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அய்யாக் கண்ணு உட்பட விவசாயிகள் 10 பேர், பாதி மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கரூர் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

போராட்டம் குறித்து அய்யாக் கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது: விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளு படி என விவசாயிகளுக்காக அறி விக்கப்படும் எதுவுமே பாதிதான் வந்து சேர்கிறது. இப்படி எதுவுமே முழுமையாக கிடைக்காமல், பாதி மட்டுமே கிடைப்பதால் பாதி தலையை மொட்டை அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அழித்துவிடும். விளைபொருட்களுக்கு லாபகர மான விலை வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யவேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, விவசாயி கள் 150 பேர் டெல்லிக்கு புறப் பட்டுச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். இதற்காக ரயிலில் முன்பதிவும் செய்தி ருந்தோம். ஆனால், போலீஸார் எங்களைப் புறப்படவிடாமல் தடுத்து வீட்டுக்காவலில் வைத்து விட்டனர். எனவேதான் போராட்டம், மறியலில் ஈடுபட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x