Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டு சிறை கேரளாவில் கொண்டு வந்த புதிய சட்டம் நிறுத்திவைப்பு

சமூக வலைதளங்களில் அவ தூறு பரப்புபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அளிக் கும் வகையில் கேரளாவில் கொண்டு வரப்பட்ட போலீஸ் சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் வகையில் கேரளா போலீஸ் சட்டம் திருத்தப் பட்டு உள்ளது. அதன்படி சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க அந்த புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த சட்டத் திருத்தம் கருத்து சுதந்திரத் துக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. செய்தியாளர் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகள் கூறும்போது, ‘கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயி ரிழப்புகளையும் அரசு குறைத்து காட்டுகிறது. இந்தப் பிரச்சினையை மறைக்கவே புதிய சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது’ என குற்றம்சாட்டின.

இதனிடையே, இந்த சட்டத் திருத்தம் பாரபட்சமற்ற இதழியல் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது அல்ல என்று முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும், இந்தச் சட்டத் திருத்தத்துக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், கேரள போலீஸ் சட்டம், 2011-ல் புதி தாக சேர்க்கப்பட்ட பிரிவை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தச் சட்டத்திருத்தம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் கேட்கப் பட்டுள்ளன. புதிய திருத் தத்துக்கு பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ள நிலையில், சட்டத் திருத்தத்தை நிறுத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் திறந்த மனதுடன் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x