Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் காலமானார்

புதுடெல்லி

அசாம் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் (84) நேற்றுகாலமானார். அவரது மறைவுக்குபல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித் துள்ளனர்.

அசாம் முன்னாள் முதல்வர்தருண் கோகோய் கடந்த ஆக.25-ம் தேதி கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறிது நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றஅவர், பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.

இருந்தபோதிலும், கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளான உடல் வலி, தசைப் பிடிப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்டவற்றால் அவ ருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த சூழலில், கடந்த 2-ம் தேதி மீண்டும் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருண் கோகோய் அனுமதிக்கப்பட்டார். முதலில் சிகிச்சைக்கு அவரது உடல் நன்றாக ஒத்துழைத்து வந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாகவே அவரதுஉடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

அவரது உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று பிற்பகல் தருண் கோகோய் உயிரிழந்தார்.

பிரதமர் இரங்கல்

தருண் கோகோயின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

தருண் கோகோய் மிக பிரபலமான தலைவர் மட்டுமல்லாமல் சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். அசாம் மாநிலத்திலும், மத்திய அரசிலும் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனதுஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்தப் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அசாம் மாநிலம் ஜோர்ஹட் மாவட்டத்தில் 1936-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி பிறந்தவர் தருண் கோகோய். ஜகநாத் பகூராகல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தஅவர், குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். சிறுவயதிலேயே அரசியல் ஆர்வத்தால் காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். முதன்முதலாக, 1971-ம்ஆண்டு மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அகில இந்திய காங்கிரஸின் இணைச் செயலாளர், அசாம் காங்கிரஸ் தலைவர் என கட்சி யிலும் பல்வேறு பதவிகளை அவர் வகித்திருக்கிறார்.

அசாம் மாநில முதல்வராக 2001-ம் ஆண்டு தருண் கோகோய் முதன்முதலில் பதவியில் அமர்ந் தார். பின்னர் அடுத்தடுத்த 3 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று 2016-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்த பெருமை தருண் கோகோய்க்கு உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x