Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

கேரள அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சபரிமலை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் கேரள அரசு வகுத்துள்ள கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று காரணமாக, சபரிமலை பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கேரள அரசு வகுத்துள்ளது. அதன்படி, அனைத்து பக்தர்களும் கேரள காவல் துறையின் மெய்நிகர் வரிசைக்கான இணையதளத்தில் (https://sabarimala online.org) பதிவு செய்ய வேண்டும். தொடக்கத்தில், வார நாட்களில் 1,000 பேர், வார இறுதி நாட்களில் 2,000 பேர் மட்டுமே முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்ய முடியும். இந்த பதிவுக்கு, தரிசன நேரத்துக்கு முன்பு 24 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட ‘கரோனா தொற்றின்மை சான்று’ கட்டாயம் ஆகும்.

கடந்த காலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனுமதி இல்லை. இதயநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுபோன்ற பிற இணை நோய் உள்ளவர்கள் எந்த வயதினரானாலும் அனுமதி இல்லை. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் பயணத்தை தவிர்க்கவும்.

பயணத்தின்போது முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு உபயோகித்து கழுவ வேண்டும்.

அனைத்து பிரதான நுழைவுவாயில்களிலும் கட்டண அடிப்படையில் ஆன்டிஜென் சோதனை வசதிகள் செய்யப்பட்டிருக்கும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள் அவற்றை கொண்டுவர வேண் டும்.

நெய் அபிஷேகம் செய்யவோ, பம்பை ஆற்றில் குளிக்கவோ, சந்நிதானம், பம்பை, கன்னிமூல கணபதி கோயில் ஆகிய இடங்களில் இரவு தங்கவோ அனுமதி இல்லை. எருமேலி, வடசேரிக்கரா ஆகிய 2 வழிகளில் மட்டுமே தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த வழிமுறைகளை தமிழ கத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x