Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

ஆவடியில் ரூ.28 கோடி செலவில் அமைக்கப்பட்ட பசுமைப் பூங்காவை முறையாக பராமரிக்காததால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார்

ஆவடி, பருத்திப்பட்டு ஏரியில் ரூ.28கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பசுமைப் பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக, பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் 87.06 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பாக மாற்றப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் குடியிருப்புகளில் இருந்து வரும்கழிவுநீர் சேமிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில் ரூ.28.16கோடி செலவில் சீரமைக்கப்பட்டு கடந்தஆண்டு ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது.

இப்பூங்காவுக்கு, ஆவடி மற்றும்சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த500-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஆனால், இப்பூங்காவில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவது இல்லை.

கரோனா ஊரடங்கு சமயத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததால், அவர்கள் வேலைக்கு வருவதில்லை. தற்போதுகுறைந்த எண்ணிக்கை ஊழியர்களே பணிக்கு வருகின்றனர். அவர்களால்தூய்மைப் பணியை முழுமையாக மேற்கொள்ள முடிவதில்லை.

இதனால், நடைபாதையில் நாய், பறவைகளின் அசுத்தங்களும், கழிவுநீர் கால்வாயில் தேங்கும் குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றி அதை நடைபாதையில் போடுவதையும் சுத்தப்படுத்த ஆட்கள் இல்லை. அதேபோல், ஏரியில் பிடிக்கப்படும் மீன்களும்பூங்காவுக்கு வெளியே கொண்டு சென்றுபிரிக்காமல், நடைபாதையில் வைத்தே பிரிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

பாதுகாப்பு பணி காவலர்களும் மாலைநேரத்தில் பூங்காவைச் சுற்றி காவல்பணியில் ஈடுபடுவது இல்லை. பூங்காவைசுற்றி அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளில் சில விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால், பூங்காவுக்கு குடும்பத்தாருடன் வருவோருக்கு பெரும் அச்சமும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

ஆவடி தொகுதி எம்எல்ஏ அமைச்சர்பாண்டியராஜன் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அடிக்கடி இப்பூங்காவுக்கு வந்து செல்கிறார். எனினும், இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படு வதில்லை. இனியாவது இப்பூங்காவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x