Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று முதற்கட்ட சிறப்பு முகாம்

கோவை/திருப்பூர்: 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 21, 22, டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய முதற்கட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ன் மூலமாகவும், பதிவை நீக்கம் செய்ய படிவம் 7-ன் மூலமாகவும், திருத்தம் செய்ய படிவம் 8-ன் மூலமாகவும், ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்டவர்கள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ மூலமாகவும், ஒரு தொகுதியில் இருந்து வேறு சட்டப்பேரவை தொகுதிக்கு முகவரி மாறியவர்கள் படிவம் 6 மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x