Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

'கலா உத்சவ்' போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி

புதுச்சேரி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட உள்ள கலா உத்சவ் போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இடைநிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவர் களின் தனித்திறன்களை வெளிக் கொணறும் வகையில் 'கலா உத்சவ்'என்ற தலைப்பில் கலைப் போட்டி களை தேசியளவில் நடத்தி வருகிறது. நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக இணையதள முறையில் கலைப் போட்டிகளை நடத்த உள்ளது.

அதன்படி புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறை சமக்ர சிக்ஷா வால் தனிநபர் (ஆண், பெண்) பிரிவில் வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவி மீட்டல், ஓவியம் உள்பட 9 பிரிவுகளில் புதுச்சேரியின் 4 மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்ட அள வில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலும், மாநில அளவில் முதலிடம் பெறுவோர் தேசிய அளவிலும் போட்டிகளுக்கும் தேர்ந்தெடுக் கப்படுவர்.

இப்போட்டிகளில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர் கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 94427 87052, 0413-2225751என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். போட்டிகளுக்கான விதிமுறைகள் நுழைவுப் படிவத்தை www.kalautsav.in, http://schooledn.puducherry.gov.in என்ற இணையதளத்திலும் அறியலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையின் கையொப்பத்துடன், உரிய பள்ளியின் வழியாக வரும் டிசம்பர் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

மாணவர்களோ, பெற்றோர்களோ நேரடியாக விண்ணப்பங் களை சமர்ப்பிக்க இயலாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x