Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

`ஏசியா புக் ஆப் ரெக்கார்டில்' இலங்கை அகதிச் சிறுவன் சாதனை

208 வகை நிறுவனங்களின் இலச்சினைகளை (லோகோ) 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்தி மதுரை இலங்கை அகதிகள் முகாம் சிறுவன் `ஏசியா புக் ஆப் ரெக்கார்டில்' இடம்பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

மதுரை கூடல் நகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பிரவீன் மகன் ப்ரஜன் (4). யூகேஜி படிக்கும் இச்சிறுவன் அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் இலச்சினைகளைப் பார்த்தவுடன் பெயரை உடனே கூறுகிறார். தன்னுடைய இந்தத் திறமையை ஒரு வீடியோவாக பதிவு செய்து `ஏசியா புக் ஆப் ரெக்கார்டு'-க்கு அனுப்பியிருந்தார். அதில், 208 நிறுவனங்களின் இலச்சினைகளை 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்திச் சொல்லியிருந்தார். இவரது சாதனையை `ஏசியா புக் ஆப் ரெக்கார்டு' அங்கீகரித்துள்ளது. இதற்கு முன் `இண்டியா புக் ஆப் ரெக்கார்டில்' ஒருவர் 178 நிறுவனங்களின் இலச்சினைகளை 3 நிமிடம் 49 நொடிகளில் அடையாளப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x