Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குகல்லூரி சேர்க்கை ஆணை முதல்வர் பழனிசாமி வழங்கினார் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட் டரங்கத்தில் நேற்று தொடங் கியது. 7.5 சதவீத உள் ஒதுக் கீட்டில் முதலிடம் பிடித்த 18 அர சுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கி னார். ஆணைகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள், அவர் களின் பெற்றோர் முதல் வருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் மற்றும் 165 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதேபோல், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்களும் (என்ஆர்ஐ-க்கு 306 இடங்கள் உட்பட), 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.

2020-21 கல்வி ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க் கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 23,707 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,276 பேரும் இடம் பெற்றனர். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் உள்ள 313 எம்பிபிஎஸ் இடங்கள், 92 பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் 951 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி யது. முதலில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான 405 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொடங்கியது. இது, வரும் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. முதல் நாளான நேற்று அரசுப் பள்ளி மாணவர் களுக்கு அறிவிக்கப்பட்ட தர வரிசையின்படி 270 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். கலந்தாய்வை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது சுகா தாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத் துவக் கல்வி இயக்குநர் கே.நாராயணபாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் ஜி.செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். கரோனா காலகட்டம் என்பதால் பரிசோதனை உள்ளிட்ட பொது சுகாதார விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். தர வரிசை யில் முதல் இடம் பிடித்த மாணவர் ஜீவித்குமார், அடுத்த இடங்களை பிடித்த அன்பரசு, திவ்யதர்ஷினி, குணசேகரன், பூபதி, சிவரஞ்சினி, சூர்யலட்சுமி ஆகியோர் சென்னை மருத்துவக் கல்லூரி யையும், 8-வது இடம் பிடித்த இந்திராதேவி ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியையும், தொடர்ச்சியாக சரத்குமார், ரம்யா ஆகியோர் சென்னை மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்தனர்.

பகல் 1 மணிக்கு நேரு விளையாட்டரங்குக்கு வந்த முதல்வர் பழனிசாமி, கலந் தாய்வில் கலந்துகொண்டு இடங்களை தேர்வு செய்த மாணவ மாணவிகளில் முதல் 18 பேருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை வழங்கினார். அவர்களுக்கான வெள்ளை நிற அங்கி, ஸ்டெ தஸ்கோப், உடற்கூறியியல் உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தையும் முதல்வர் வழங்கினார்.

சேர்க்கை ஆணையை பெற்ற மாணவ, மாணவி களும், அவர்களின் பெற்றோ ரும் மேடையிலேயே முதல் வருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். சில பெற் றோரும், மாணவர்களும் முதல் வரின் காலில் விழுந்து வணங் கினர். பின்னர், கலந்தாய்வில் பங்குபெற்று இடங்களை உறுதிசெய்து கொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளு டன் முதல்வர் பழனிசாமி குழு புகைப்படம் எடுத்துக்கொண் டார். அப்போது, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களை மாணவர்கள் பறக்கவிட்டனர். முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்கு மாறு அரசுப் பள்ளி மாண வர்கள் 270 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 262 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு சமவாய்ப்பு அளித்து, அவர் களின் மருத்துவக் கனவு லட்சியத்தை நிறைவேற்ற இந்த அரசு முடிவு செய்தது. அதற்காக பல தடைகளைத் தாண்டி இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்து ஏழை, எளிய மாணவர்களின் கனவை நினைவாக்கியுள்ளது. இதுவரை உங்கள் குடும்பம் எவ்வாறாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இனி மேல் மருத்துவர் குடும்பம் என்றே அடையாளம் காணப் படும்’’ என்றார்.

கல்லூரி சேர்க்கைக்கான ஆணையை பெற்றுக் கொண்ட மாணவி அர்ச்சனாவின் தந்தை சக்திவேல் மேடையில் முதல் வருக்கு நன்றி தெரிவித்து பேசி னார். அப்போது நாதழுதழுக்க பேசிய அவர், ‘‘நான் ஒரு கூலித் தொழிலாளி. எனக்கு வார்த்தையே வரவில்லை. என் மகளை டாக்டராக பார்க்க ஆசைப்பட்டேன். அரசுப் பள்ளி யில் படிக்க வைத்துக் கொண்டு, எப்படி டாக்டராக்க முடியும் என நினைத்து அழுதேன். அரசு அறிவித்த இந்த 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இந்த சமூகத்தில் எனது மகளும் மருத்துவராவது சாத் தியமாகியுள்ளது. இதற்கெல் லாம் காரணமான முதல்வர் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று கடவுளிடம் கேட்கிறேன்’’ என்றார். பின்னர் சக்திவேலும் அர்ச்சனாவும் கண்ணீர் மல்க முதல்வரின் காலில் விழுந்து வணங்கினர்.

மற்றொரு மாணவி மோனி ஷாவின் தாய் ரேவதி பேசும் போது, ‘‘என் மகளை மருத்து வப் படிப்பில் சேர்க்க ஆசைப் பட்டேன். பணம் கட்டி என்னால் படிக்க வைக்க முடியாது. அத னால் நன்றாக படிக்க வேண்டும் என்று மகளிடம் கூறிவந்தேன். அவளும் நல்ல மதிப்பெண் எடுத்தார். இருந்தாலும் மருத் துவப் படிப்பில் இடம் கிடைக் குமா என்ற அச்சம் இருந்தது. அரசு 7.5 சதவீதம் உள் ஒதுக் கீடு மூலம் அந்த அச்சத்தை போக்கிவிட்டது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x