Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

காங்கிரஸ் தலைமையை விமர்சிக்கும் தலைவர்கள் வேறு கட்சியில் போய் சேர்ந்து விடலாம் கபில் சிபலுக்கு கட்சியின் மூத்த தலைவர் பதில்

காங்கிரஸ் தலைமையை விமர்சிக்கும் சில தலைவர்கள் வேறு கட்சியில் போய் சேரட்டும் என்று கபில் சிபலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலளித்துள்ளார்.

கட்சியின் மூத்த தலைவர்கள்சிலர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் நெருக்கமானவர்கள். அவர்கள் தங்கள் கருத்தை அவர்களிடமோ அல்லது முறைப்படி கட்சி அமைப்பிலோ தெரிவிக்கலாம். அதை விட்டுவிட்டு கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் தங்கள் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது.

கட்சித் தலைமையை விமர்சிக்கும் தலைவர்கள் பிஹார் தேர்தலின்போது எங்கே போனார்கள். அவர்களை தேர்தலின்போது பார்க்கவே முடியவில்லை.

பிஹார் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு கபில் சிபல் சென்றிருந்தால், அவர் காங்கிரஸின் நிலைப்பாட்டிற்குத் தனதுபங்காக பிரச்சாரத்தைப் பலப்படுத்தி மேலும் நிரூபித்திருக்க முடியும். அவர் சொல்வது சரியானது என்றும் கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால், இதை எதையும் செய்யாமல் அவரது இந்த வெறும் பேச்சு எதுவும் சாதிக்காது.

வெறும் பேச்சு எதற்கும் உதவாது. தங்களுக்கு காங்கிரஸ் கட்சி பொருத்தமற்றது என்று சில தலைவர்கள் கருதினால் அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி வேறு கட்சியில் போய் சேரட்டும். அல்லது தனிக் கட்சி தொடங்கட்டும். கட்சியின் நம்பகத்தன்மையை கெடுக்கும் வகையில் பேசக்கூடாது.

இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டைனிக் பாஸ்கர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததுதான் என்னை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது.

இந்த முடிவுகளை வைத்து பார்க்கும்போது அமைப்பு ரீதியாக காங்கிரஸ் வலுவாக இல்லை என்பதும்அடிமட்ட அளவில் காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது என்பதும் புரிகிறது.

பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. வெற்றிக்கு மிக நெருக்கமாகச் சென்ற போதிலும் நாம் ஏன் தோற்றோம் என்பதை விரிவாக ஆலோசிக்க வேண்டும்.

இத்தனைக்கும், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மிகவும் அதிக நாட்கள் ஒன்றும் கடக்கவில்லை. அப்படி இருந்தும், இப்போது இம்மாநிலங்களில் தோற்றதற்கான காரணம் என்ன என்பது பற்றி ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

அடிமட்ட அளவில் எவ்வளவு பலம் உள்ளது என்பதை புரிந்துகொள்ளாமல் பிஹாரில் காங்கிரஸ் கூடுதல் இடங்களில் போட்டியிட்டதாக நான் உணர்கிறேன். 70 இடங்களுக்குப் பதிலாக 45 இடங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x