Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில்ராகுல் அக்கறை செலுத்தவில்லை ஆர்ஜேடி மூத்த தலைவர் குற்றச்சாட்டு

பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அக்கறை செலுத்த வில்லை என ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) குற்றம்சாட்டி யுள்ளது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணி 110 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்ததே இக்கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆர்ஜேடி துணைத் தலைவர் சிவானந்த் திவாரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும். வெறும் 3 நாட்கள் மட்டுமே அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிறகு, சிம்லாவில் உள்ள அவரது தங்கையின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர் அக்கறை செலுத்தவில்லை. மாறாக, சிம்லாவுக்கு சுற்றுலா செல்வதில்தான் அவர் ஆர்வமாக இருந்தார். ஒரு பெரிய தேசியக் கட்சியின் தலைவர் இப்படியா நடந்து கொள்வது?

பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தியைவிட வயதிலும் அரசியல் அனுபவத்திலும் மூத்தவர். ஆனால், அவர் நாளொன்றுக்கு 4 பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். ராகுல் காந்தியோ, நாளொன்றுக்கு 2 பிரச்சாரக் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார்.

இதனால்தான், மாநிலத்தில் காங்கிரஸ் பல இடங்களில் தோல்வி அடைந்ததது. இதுவே மெகா கூட்டணி தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

இவ்வாறு சிவானந்த் திவாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x