Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM

தேனியில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்

தேனி

குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தேனி மாவட்ட கோயில்களில் நாளை சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

நாளை (ஞாயிறு) இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி மாலை 5.30 மணிக்கு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்க உள்ளன.

தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் மாலை மஹா கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம் நடைறெ உள்ளது. தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு தட்சிணாமூர்த்திக்கும், இரவு 8.15 மணி முதல் குரு பகவானுக்கும் மஹா அபிஷேகம் நடைபெறும். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிக்காரர்கள் பரிகார பூஜை செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x