Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

மோடி, நிதிஷ் உட்பட யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பேட்டி

பிஹார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றியது. மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ஆர்ஜேடி உருவெடுத்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் ஆள்பலம், பணபலத்தை பயன் படுத்தினர். ஆனால் இந்த 31 வயது தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. தனிப்பெரும் கட்சியாக சட்டப்பேரவையில் ஆர்ஜேடி அமர்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

பளபளவென இருந்த நிதிஷ்குமாரின் முகத்தை இப்போது பாருங்கள். அவர் தற்போது 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதுதான் மாற்றத்துக்கான நேரம் என்று மக்கள் வாக்களித்தனர். நிதிஷ் குமார் வேண்டுமானால் முதல்வர் நாற்காலியில் அமரலாம். ஆனால் நாங்கள் மக்களின் மனதில் அமர்ந்திருக்கிறோம். பின்வாசல் வழியாக வந்து ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார் நிதிஷ் குமார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x