Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

கல்வி ரத்னா விருதுகள் நவாஸ் கனி எம்.பி. வழங்கினார்

சிறப்பாக செயல்பட்ட சமூக சேவகர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கல்வி ரத்னா விருதுகளை ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி வழங்கினார்.

தேசிய கல்வி தினத்தையொட்டி ராமநாதபுரம் எம்பி தொகுதிக்கு உட்பட்ட சமூக சேவை செய்வோர் உள்ளிட்டோருக்கு 6 பிரிவுகளின் கீழ் கல்வி ரத்னா எனும் விருதுகளை நவாஸ்கனி எம்.பி. வழங்கினார். இதில், மருத்துவ சேவைக்கான விருது மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் குரு சங்கருக்கும், தமிழ்த் துறைக்கான விருது கவிஞர் கு.அழகர்சாமிக்கும், அறிவியல் துறைக்கான விருது முகமது கைப்புக்கும், சமூக சேவைக்கான விருது எஸ்.ஏ.அமீர் ஹம்சாவுக்கும், நல்லாசிரியர்களுக்கான விருது சே.சத்தியமூர்த்தி, சோலை ராஜா, மணிமொழி, ஜெயப்பிரகாசம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

சிறந்த பள்ளிக்கான விருது சின்ன ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொருளாளர் எம்எஸ்ஏ.ஷாஜகான், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x