Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்கு உள்ளூர் தயாரிப்புகளை வாங்குங்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

பொருளாதார வளர்ச்சிக்கு பங் களிக்கும் வகையில், தீபாவளி பண் டிகைக்கான அனைத்து பொருட் களையும் உள்ளூர் தயாரிப்புகளாக வாங்க வேண்டும் என்று நாட்டு மக் களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் தனது சொந்த தொகுதியான வாரணாசி யில் சாரநாத் ஒளி-ஒலி காட்சி, ராம்நகர் லால்பகதூர் சாஸ்திரி மருத்துவமனை தரம் உயர்த்துதல், கழிவு நீர் அகற்றும் பணிகள், 105 அங்கன்வாடி மையங்கள், 102 பசு பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட 219 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்., மேலும், ரூ.394 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள காசியின் சில குறிப்பிட்ட வார்டுகளின் வளர்ச் சிப் பணிகள், வாரணாசி நகரின் சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட 14 புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந் நிகழ்ச்சியில், லக்னோவில் இருந்து காணொலி காட்சி மூலம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

மக்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் உள்ளூர் தயாரிப்புகளையே வாங்க வேண் டும். இதை வாரணாசி மக்களுக்கு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன். ஒவ்வொருவரும் உள்ளூர் தயா ரிப்புகளை வாங்கும்போது அதைப் பற்றி பெருமையாக பேசலாம். ‘இது எங்கள் ஊரில் தயாரிக்கப்பட்டது’ என்று பெருமிதத்துடன் கூறலாம். இந்த செய்தி பரவலாக மக்களிடம் சென்று குறிப்பிட்ட உள்ளூர் தயா ரிப்புகளை வெளியூர்களில் இருந் தும் மக்கள் விரும்பி வாங்குவார் கள். இதனால், வியாபாரம் அதிகரிக்கும்.

உள்ளூர் பொருட்களை வாங்கு வது என்பது அகல்விளக்குகளை மட்டும் வாங்குவது என அர்த்தம் கொள்ளக் கூடாது. தீபாவளிக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட் களையும் இது குறிக்கும். உள்ளூர் பொருட்களை வாங்கி அவற்றை ஊக்கப்படுத்தும்போது அதை தயாரிப்பவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் உள்ளூர் பொருட்களின் தயாரிப் பாளர்கள் ஊக்கம் பெற்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கு வார்கள்.

வாரணாசி தொகுதியில் அடிப் படை வசதிகள் மேம்படுத்தப்பட் டுள்ளன. சுகாதாரம், கல்வி, விவ சாயம், தொழில் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள் ளது. இதனால், நாட்டின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் தேவைகளுக்கு டெல்லி, மும்பை போன்ற நகரங்களை சார்ந்து இருக்காமல் வாராணாசிக்கு வரு கின்றனர். புதிய உள்கட்டமைப்பு கள் மூலம் காசி மக்களும், சுற் றுலா பயணிகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி நேரத்தை வீண்டிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாத்பூரில் இருந்து வாரணாசி நகரை இணைக்கும் சாலை வாரணாசிக்கு புதிய அடையாளமாக இருக்கும். வாரணாசி விமான நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் தினசரி 12 விமானங்களை கையாண்டு வந்த நிலை மாறி, தற்போது நாளொன் றுக்கு 48 விமானங்களை கையாண்டு வருகிறது.

வாரணாசியில் வசிக்கும் மக் கள் மற்றும் இங்கு வருகை தரு பவர்களின் வாழ்க்கையை எளி தாக்கும் வகையில், நவீன உள்கட் டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 6 ஆண்டுகளுக்கு முன்புவரை இல்லாத வகையில் நகரில் சுகாதாரத் துறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வாரணாசி எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் எல்லா பகுதிகளும் சமமான வளர்ச்சி பெற வேண்டும் என்பதே பாஜக அரசின் குறிக்கோள். அதற்கு ஏற்றபடி எல்லா பகுதிகளிலும் பாரபட்சமில்லாமல் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, இந்திய கூடைப் பந்து வீராங்கனை பிரஷாந்தி சிங்குடன் காணொலி காட்சி மூலம் மோடி கலந்துரையாடினார். மேலும், நலத் திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகளுடனும் பேசினார். வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்தும் மக்களின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதற்காக, வாரணாசி நகரின் 6 இடங்களில் காணொலி காட்சி மூலம் பிரதமருடன் மக்கள் உரையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x