Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின்உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

முதல்வர் பழனிசாமி: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி. கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதன் மூலம்தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ், தமிழ் பெண்களின் திறமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துரைத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன்,துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள். வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தேர்தலில் தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்தவரை துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சி.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அரசியலில் நீண்ட காலஅனுபவம் பெற்ற பழுத்த அரசியல்வாதி ஜோ பைடன். எனவே, அவரதுதலைமையை அமெரிக்க மக்கள்ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலாஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார் என்ற செய்தி உலகத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இருவருக்கும் வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற ஜோ பைடன், துணை அதிபர்கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள். திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்தான் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்கர் அல்லாத முதல் பிற நாட்டவர். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி காண அவரது வெற்றி உதவட்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ், ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகமாக திகழ்கிறார்.

அமமுக பொதுச் செயலாளர்டிடிவி தினகரன்: அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து. தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமையட்டும்.

பெரம்பலூர் எம்பி. பாரிவேந்தர்: அமெரிக்க அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். கமலா ஹாரிஸின் வெற்றி தமிழர்களுக்கு பெருமை.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x