Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும்ஜனவரி 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்

சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை வசூலிப்பதற்கு அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாகிறது.

இது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. புதிய வாகனங்களுக்கு மட்டுமின்றி பழைய 4 சக்கர வாகனங்களுக்கும் இது கட்டாயம்என மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுங்கச் சாவடிகளில்வாகனங்கள் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண முறையில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் முன்கூட்டியே பணம் செலுத்தி பெறப்படும் ஃபாஸ்டேக் முறைகொண்டுவரப்பட்டது.

இது பகுதியளவில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. தற்போது முழு அளவில் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் இதுகட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் இந்த மின்னணுசுங்கச் சாவடி கட்டண அட்டை ஃபாஸ்டேக் வழங்கப்பட வேண்டும் என்றும் அது 2021ம் ஆண்டு ஜனவரி முதல் கட்டாயம் எனவும் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1989-ன் படி டிசம்பர் 1, 2017-ம்ஆண்டுக்குப் பிறகு தயாரான வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் இருக்க வேண்டும் என வாகன உற்பத்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக வாகனங் களுக்கு சான்றிதழ் (எப்சி) வழங்கும் போது பழைய வாகனங்களுக்கு அளிக்க வேண்டும் எனகூறப்பட்டது. இது மேலும் நீட்டிக்கப்பட்டு தேசிய அளவில் இயக்கப்படும் (நேஷனல் பர்மிட்)வாகனங்களுக்கு அக்டோபர் 1,2019-ம் ஆண்டு முதல் கட்டாய மாக்கப்பட்டது.

அதேபோல வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் தரப்பு காப்பீட்டில் படிவம் 51-ஐ பதிவு செய்யும் போது ஃபாஸ்டேக் பதிவு எண் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் இது ஏப்ரல் 1, 2022 முதல் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் அட்டையை பல்வேறு முறைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. வாகனங்களின் முன்பகுதி கண் ணாடியில் ரேடியோ அலைவரிசை பதிவு எண் ஃபாஸ்டேக் மூலம் கிடைக்கும் தகவலின் அடிப் படையில் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டண தொகை வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாக பிடித்தம் செய்யப்படும். சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இதனால் நேரமும் மிச்சமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x