Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

நோயாளிகளின் மனஅழுத்தத்தை போக்க கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் நூலகம்

சென்னை கிண்டி அரசு கரோனாமருத்துவமனையில் நோயாளிகளின் மனஅழுத்தத்தைப் போக்க1,700-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவ மையம், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய கரோனாமருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 750 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவத்துடன் தினமும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், நோயாளிகள் தங்களுடைய நேரத்தை பயனுள்ளதாக செலவிடும் வகையில் மருத்துவமனையில் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சைப் பெற்று வீடுகளுக்குத் திரும்பியவர்கள் புத்தகங்களை நூலகத்துக்கு வழங்கி வருகின்றனர்.

1,700 புத்தகங்கள்

இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் கே.நாராயணசாமியிடம் கேட்டபோது, “மருத்துவமனையில் 2-வது தளத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் மருத்துவம், மனநலம், குழந்தைகள் நலம், யோகா, வரலாறு, கல்வி, சிறுகதைகள் என மொத்தம் 1,700 புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன. தினசரி நாளிதழ்களும் நூலகத்துக்கு வாங்கப்படுகின்றன. தினமும் காலை 8 முதல் பகல் 11 மணி வரையும் மாலை 4 முதல்இரவு 7 மணி வரையும் நூலகம்திறந்திருக்கும். அந்த நேரத்தில் நூலகத்துக்கு வந்து படிக்கின் றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x