Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி

மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை வெளியிட்ட நிலையில், தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2017-18 கல்வியாண்டு முதல் ‘நீட்’ தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேரும் எண்ணிக்கை குறைந்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு ஒருபக்கம் கோரினாலும், மறுபுறம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியும் அளித்து வருகிறது. இருப் பினும், அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய அளவில் மருத்துவ படிப்பு களில் சேர முடியவில்லை. இதை கருத் தில்கொண்டு, ‘மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதுதொடர்பாக ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, கடந்த ஜூன் 8-ம் தேதி அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அக்குழு பரிந்துரைத்தது.

குழுவின் பரிந்துரை குறித்து, முதல் வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விவா திக்கப்பட்டது. அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் பின், கடந்த செப்டம்பரில் நடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் உள் ஒதுக் கீட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்பு தலுக்காக செப்.18-ம் தேதி அனுப் பப்பட்டது.

ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்காத நிலையில், அக்.5- ம் தேதி முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களும், அதன்பின், அக்.20-ம் தேதி அமைச்சர்கள் குழுவும் ஆளு நரை சந்தித்து மீண்டும் இது தொடர் பாக வலியுறுத்தினர். அப்போது மசோதா தனது பரிசீலனையில் உள்ளதாகவும், 3, 4 வாரங்களில் முடிவெடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். எதிர்க்கட் சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதி யிருந்தார்.

இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஆளுநர் 45 நாட்களுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் நிலை கருதி, ஆளுநரின் அதிகாரத்துக்கு நிகரான அரசியலமைப்பு சட்டப்பிரிவு 162-ன் கீழ், மாநிலத்துக்கான சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசாணையை நேற்று முன்தினம் அரசு வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த முடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்றன. இதற்கிடையே, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், ‘சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆளுநர் மிக விரைவாக முடிவெடுக்க வேண்டும். அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், உள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்பு களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் தன் ஒப்புதலை அளித்துள்ளார் என்பது தமிழக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 26-ம் தேதி மத்திய அரசின் தலைமை வழக் கறிஞரிடம் (சொலிசிட்டர் ஜெனரல்) இந்த சட்ட மசோதா குறித்து சட் டரீதியிலான கருத்தை கேட்டிருந்தார். சட்டக் கருத்து நேற்று (அக் 29-ம் தேதி) கிடைத்தது. விரைவாக கருத்து கிடைத்த நிலையில், சட்ட மசோதா மீது தனது ஒப்புதலை ஆளுநர் வழங்கியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநரின் ஒப்புதலுடன் அவரது செயலர் விஷ்ணு பாட்டீல் எழுதிய கடிதம், அதற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா அளித்த பதில் ஆகியவையும் வெளி யிடப்பட்டது. தமிழக அரசின் சட்ட மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு இணக்கமானதா என்று கோரப்பட்ட தற்கு, அரசியலமைப்பு சட்டத்துக்கு இணக்கமானது என்று துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் மருத்துவ கலந்தாய்வு

முதல்வர் பழனிசாமி நேற்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை யில் ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்தை நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செய லர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களி டம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும் போது, ‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்துக்கு உ ட்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், மசோதா வுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி நேரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டே இடஒதுக்கீடு அளிப்பதற் கான பணிகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. விரைவில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கு வதற்கான அறிவிப்பு வெளியாகும். திமுகவின் போராட்டத்தால்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப் பேரவையில் இதுகுறித்து தனித் தீர்மானம் ஏதேனும் கொண்டு வந் தார்களா? அரசுக்கு கருத்துரு அளித்தார்களா? இது முழுக்க முழுக்க அதிமுக அரசு, முதல்வர் பழனிசாமியின் எண்ணத்தில் உருவானது. அவர்கள் இதற்கு எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x