Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் உட்பட 132 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்தது ஆந்திர அரசு

இணையவழி சூதாட்டம் மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட 132 செல்போன் செயலிகளுக்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.

குறுக்கு வழியில் விரைவாக பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் இளைஞர்கள் பலர் இணையவழி சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘பப்ஜி’ உள்ளிட்ட சில இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் இணையவழி சூதாட்டம் மற்றும் சில ஆபத்தான இணையவழி விளையாட்டுகளை ஆந்திர அரசுதடை செய்துள்ளது. இதில், பேடிஎம்ஃபர்ஸ்ட் கேம், செல்போன் ப்ரிமியர் லீக் (எம்பிஎல்), அட்டா-52 உள்ளிட்ட சில இணையவழி விளையாட்டுகள் உட்பட 132 செல்போன் செயலிகளுக்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது. தடைசெய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்களை இனி விளையாட முடியாது.

ஆந்திர அரசின் விளையாட்டுசட்டம் 1974-ன் படி இணையவழிசூதாட்டம் மற்றும் விளையாட்டுபோன்றவை தடை செய்யப்பட் டுள்ளது. இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்க முடியாது என்றும் ஆந்திராவில் உள்ள இன்டர்நெட் மையங்களிலும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிஅறிவித்துள்ளார். இதற்கு பெற்றோர், மாணவர்கள், இளைஞர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோரும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஜெகன் மோகன் கடிதம்

இதனிடையே, கடந்த 27-ம் தேதிஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதினார். அதில், "இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடும் இணையவழி சூதாட்டம், மற்றும் சில விளையாட்டுகளை ஆந்திர அரசு தடை செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு சம்பந்தப்பட்ட விளையாட்டு, சூதாட்டங்களை இந்திய இன்டர்நெட் சேவைகளில் இருந்து நீக்க வழிவகை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x