

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ T5e போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி5இ ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் இந்த சீரிஸின் முதல் பதிப்பான ‘டி1’ மாடல் அறிமுகமானது. தற்போது ‘டி5இ’ வெளிவந்துள்ளது.
விவோ டி5இ போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.74 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
>> Unisoc T7225 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 4ஜிபி ரேம்
>> 64ஜிபி ஸ்டோரேஜ்
>> 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>> 5,500 mAh பேட்டரி
>> 15 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் வருகிறது
>> இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> 4ஜி நெட்வொர்க்
>> இந்த போனின் விலை ரூ.13,999 முதல் தொடங்குகிறது