Tecno Spark Go 3 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Tecno Spark Go 3 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ ஸ்பார்க் கோ 3 புரோ போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் இந்நிறுவனம் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்த நிறுவனத்தின் புது வரவாக ‘டெக்னோ ஸ்பார்க் கோ 3 புரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

ஸ்பார்க் கோ 3 புரோ போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.78 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

>> மீடியாடெக் ஹீலியோ ஜி81 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 4 ஜிபி ரேம்

>> 64, 128 ஜிபி ஸ்டோரேஜ்

>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

>> 5,200mAh பேட்டரி

>> 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> 4ஜி நெட்வொர்க்

>> நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> இதன் விலை ரூ.15,999 முதல் தொடங்குகிறது

Tecno Spark Go 3 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இன்டர் மியாமிக்காக ஒரே ஆட்டத்தில் 4 கோல்கள் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in