

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்த நிறுவனத்தின் புது வரவாக ‘டெக்னோ Pova 8’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
முந்தைய Pova 7 மாடல் உடன் ஒப்பிடும்போது பேட்டரி, சிப்செட், டிஸ்பிளே, பின்பக்கத்தில் உள்ள மேட்ரிக்ஸ் டிஸ்பிளே போன்றவை கவனம் ஈர்க்கிறது. கேமிங்கில் ஆர்வம் கொண்ட பயனர்களை கருத்தில் கொண்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போன் இரண்டு விதமான வேரியன்ட்டில் வெளிவந்துள்ளது.
டெக்னோ Pova 8 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.76 இன்ச் எல்சிடி டிஸ்பைல்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> மீடியாடெக் டிமான்சிட்டி 7100 சிப்செட்
>> 6, 8 ஜிபி ரேம்
>> 128 ஜிபி ஸ்டோரேஜ்
>> பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 8,000mAh பேட்டரி
>> 45 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது