ஐயப்​ப பக்தர்களுக்காக 6 மொழிகளில் ‘சரண்’ டிஜிட்டல் தளம்

ஐயப்​ப பக்தர்களுக்காக 6 மொழிகளில் ‘சரண்’ டிஜிட்டல் தளம்
Updated on: 
1 min read

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 41 நாட்​கள் நடை​பெறும் மண்​டல கால வழிபாடு கடந்த 17-ம் தேதி தொடங்​கியது. நாடு முழு​வதிலும் இருந்து நாள்​தோறும் பல்​லாயிரக்​கணக்​கான பக்​தர்​கள் இரு​முடி கட்டி வந்து சுவாமி ஐயப்​பனை தரிசனம் செய்​கின்​றனர்.

இந்​நிலை​யில், சபரிமலைக்கு வரும் பக்​தர்​களின் யாத்​திரையைப் பாது​காப்​பானதாகவும், வசதி​யானதாகவும் மாற்​றும் வகை​யில் பயண விவரங்​கள், தங்​கும் வசதி​கள் மற்​றும் உள்​ளூர் அறி​விப்​பு​களை 6 மொழிகளில் வழங் ​கும் ‘சரண்’ (SARAN - Sabarimala Assistance and Route Advisory Network) என்ற டிஜிட்​டல் தளம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. கேரள உள்​ளாட்​சித் துறை அமைச்​சர் கே.எம். ஷாஜி இந்த ‘சரண்’ தளத்தை நேற்று தொடங்கி வைத்​தார்.

இதன் மூலம் சபரிமலைக்​குச் செல்​லும் வழித்​தடங்​களில் உள்ள ஓய்வு மையங்​கள், அடிப்​படை வசதி​கள், போக்​கு​வரத்து வசதி​கள் மற்​றும் உள்​ளூர் அறி​விப்​பு​கள் உள்​ளிட்ட தகவல்​களை ஒரே இடத்​தில் பெறலாம்.

மலை​யாளம், ஆங்​கிலம், தமிழ், தெலுங்கு, கன்​னடம், இந்தி ஆகிய 6 மொழிகளில் இந்​தச் சேவை கிடைக்​கிறது. பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டை கைபேசி​யில் உள்ள கேமரா மூலம் ஸ்​கேன் செய்து, தனியாக எந்​தச் செயலியையும் பதி​விறக்​கம் செய்​யாமல் இந்​தத் தளத்​தைப் பயன்​படுத்​தலாம்.

மேலும் https://saran.lsgdpr.in/ லிங்க் வாயிலாகவும் இந்த சேவையை பெறலாம். இதில் உள்ள வசதி​யைப் பயன்​படுத்தி அரு​கிலுள்ள ஓய்வு மையங்​கள், மருத்​து​வ​மனைகள், காவல் நிலை​யங்​கள், தீயணைப்பு நிலை​யங்​கள், ஏடிஎம் மையங்​கள், பெட்​ரோல் நிலை​யங்​கள் மற்​றும் பேருந்து நிலை​யங்​களை​யும் கண்​டறிய முடியும். தினசரி பூஜை நேரங்​கள் அன்​னதானம், சிறப்​புப் பேருந்து சேவை​கள், மருத்​துவ முகாம்​கள் குறித்த அறி​விப்​பு​களும் வெளி​யிடப்​படும்.

ஐயப்​ப பக்தர்களுக்காக 6 மொழிகளில் ‘சரண்’ டிஜிட்டல் தளம்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆலோசனை: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

X