

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எஸ்26 FE போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் பிரீமியம் செக்மென்ட் விலையில் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எஸ்’ சீரிஸ் வரிசையில் சாம்சங் கேலக்சி எஸ்26 FE போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு இதன் முந்தைய மாடலான எஸ்25 FE போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் எஸ்26 வரிசை போன்கள் வெளிவந்தன.
சாம்சங் கேலக்சி எஸ்26 FE: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
>> Exynos 2500 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம்
>> 8 ஜிபி ரேம்
>> 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் இந்த போன் கிடைக்கிறது
>> 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 50 + 12 + 8 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் உள்ளது
>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>> 4,900 mAh பேட்டரி
>> 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் இந்த போனில் உள்ளது
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.79,999